எமது மலையகம்

E0AEAEE0AEB2E0AF88E0AEAFE0AE95E0AEAEE0AF8D எமது மலையகம்

                       மலையகம் 

பச்சை உடை உடுத்திய மேனி

எழில் கொஞ்சும் அழகு

அதிசயத்தின் மற்றையயொதொரு அற்புதம்

அதுவே எங்கள் மலையகம்

நீரை தரும் நீரோடை

பசியை போக்கும் நாவல்

கிளிதட்டு விளையாட்டு

அதுவே எங்கள் பொழுதுபோக்கு

வெண்மை ஆடை அணிந்த மாணவர்கள்

செய்யும் குறும்புக்கு முடியவில்லை

கண்டு களித்து இன்புற நேரமில்லை

இதுவே எங்களுடைய வேலைச்சுமை

குன்றும் குழியுமான பாதைக்கு

புனரமைப்பு என்ற சொல் உதயமாகவில்லை

கள்ளங்கபடமற்ற மனதையுடைய மக்கள்

மலையகம் கொண்டுள்ள அவலம்

தினமும் பொழுது புலர்ந்ததும் வேலை

நாள்முடிவில் ஒப்பாகாத சம்பளம்

தேவையை எப்படி பூர்த்தி செய்வது என்ற ஏக்கம்

இதனுடன் வாழ்க்கையை நடத்துகிறோம்

எழுத்தறிவு இருந்தும் வேலை இல்லை

தளிர் கிள்ளும் வேலையே எஞ்சியிருக்கும்

எவ்வளவு காலம் தான் ஒளியற்ற கூட்டினுள்

சிறையடைந்து தவிப்போம்

எங்களை பற்றி யோசிக்க யாருமில்லை

தட்டி தோள் கொடுக்க எவருமில்லை

கஷ்டத்தின் மத்தியில் தூங்குகின்றோம்

நன்மைபயக்கும் விடியல் தோன்றுமென்று

சுடர்விட்டு எரியும் ஒளிச்சுடராய்

உறுதியை மனதில் திடமாகக்கொண்டு

முதலாளி வர்கத்தை உடைத்தெறிந்து

இருண்ட சிறையிலிருந்து விடுபடுவோம்

வர்ணிக்க இனி வார்த்தை இல்லை

தமிழ் இலக்கணம் போதவில்லை

கல்வியின் தாய்க்கு மதிப்பளித்து

என் கவிதையினை முடிக்கின்றேன்

Post Comment