வலி சுமக்கும் மனம்
![]() |
வலி சுமக்கும் மனம் |
![]() |
வலி சுமக்கும் மனம் |
மரம் சரிய போவதை அறியாமல்
மகிழ்ந்திருந்த நாட்கள்
பறிபோயிற்று
கண்ணீர் தான் போ
எனது வாள்கையாயிற்று
வலிகள் வாழ்க்கையில் இருப்பது
யதார்த்தம் – ஆனால்
வாழ்க்கையை வலிகளாக இருப்பது
அபூர்வம்
என்ன மாயமான உலகம்
யாருடைய தோள்களும் தயாராக இல்லை
என் வலிகளை தாங்கவும் இறக்கி வைக்கவும்
ஆறுதல் கூற யாருக்கும் வார்த்தை வருவதில்லை
இனியமொழி பேசிடும் கிளியின்
சிறகு வெட்டி எறியப்பட்டதால்
பயன் தரும் மரத்தை
துண்டுகலாக்கப்பட்டதாய்
மனமதில் கனமாக வலி மட்டும் கூடும்
எதை இழந்தாலும்
நம்பிக்கை ஒன்றே
கைக்கொடுக்கும் மென்று நம்பி
காத்திருக்கின்றேன்
எதிர் காலத்தை நோக்கி
-கசுன் –
Post Comment